Breaking

Post Top Ad

Friday, September 14, 2018

கெரிடேச்(Batticaloa Heritage ) ரோட்டறிக் கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

மட்டக்களப்பு கெரிடேச் (டீயவவiஉயடழய ர்நசவையபந) ரோட்டறிக் கழகத்தின் 2018/2019ம் வருடத்தின் 4வது புதிய தலைவராக அரசரெத்தினம் கோகுலதீபன் நாளை சனிக்கிழமை கல்லடி கிறீன் கார்டன் கோட்டலில் பி.ப 6.00 மணிக்கு   பதவியேற்கவுள்ளார்.

இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக 2019/2020 ரோட்டறி ஆண்டிற்காக தலைவராக தெரிவு செய்யப்படவுள்ள மாவட்ட ஆளுநர் எஸ். கருணாகரன், விசேட அதிதியாக மாவட்ட உதவி ஆளுநர் கன்டி பிறேவோ, கௌரவ அதிதியாக ஸ்டீபன் புஸ்பராசா மற்றும் ரோட்டறிக் கழகத்தின் அங்கத்தவர்கள்இ சமூக சேவையாளர்கள்இ மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


2014ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு கெரிடேச் ரோட்டறிக் கழகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், கரையோர சுத்திகரித்தல் வேலைத்திட்டங்கள், இரத்ததான முகாம்கள், ஊனமுற்றோர்களுக்கான கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல், கரையோர குடும்பங்களுக்காக மலசலகூட வசதிகள் வழங்குதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகளை ஏற்பாடு செய்தல், பாடசாலைகளுக்கான நூலக புத்தகங்கள் வழங்குதல், மரநடுகை போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய தலைவராக பதவியேற்கவுள்ள அரசரெத்தினம் கோகுலதீபன் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் கற்றார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான முதுமானிப் பட்டதாரியான கோகுலதீபன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரம் பேணல் திணைக்களத்தில் 13 ஆண்டுகளாக திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages