
6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் சுமார் 3 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு பிராந்தியத்தின் அணு ஆலை ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒருசில தினங்களில் மேற்கு ஜப்பானை கடும் புயல் ஒன்று தாக்கி பெரும் சேதங்களை விளைவித்திருக்கும் நிலையிலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய தலைநகரான சப்போரோவில் இருந்து தென் கிழக்காக 62 கிலோமீற்றர் தொலைவிலேயே பூகம்பம் மையம் கொண்டது. எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அத்சுமா நகரில் பலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது, இங்கே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் புதையுண்டுள்ளன.
யோஷினோ மாவட்டத்தில் 5 பேர் புதையுண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. வெளியேற முடியாமல் இருந்த 40 பேர் விமானத்தின் மூலம் பாதுகாப்பன இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வான்வழி படங்களை பார்க்கும் போது 10 முதல் 15 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. பசுமை வனாந்திரப் பகுதியில் நிலச்சரிவினால் சேறும் சகதியும் பரவி காணப்பட்டன. மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.