மட்டக்களப்பு - மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக் கழகத்தின் 46வது ஆண்டு நிறைவு முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கதிரொளி அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக் கழக தலைவர் ம.மனோரஞ்சன் தலைமையில், நடைபெற்ற இப் போட்டி நிகழ்வும் மட்டிக்கழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
எட்டு விளையாட்டு அணிகள் பங்குகொண்ட இப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு கதிரொளி அணியும் கிங்ஸ் லெபன் அணியும் தெரிவுசெய்யப்பட்டு ஆட்டம ் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் முதல் துடுப்பெடுத்தாடிய மட்டிக்கழி கதிரொளி அணியினர் 75 ஓட்டங்களைப் பெற்றனர். இவ் அணியை எதிர்த்தாடிய கிங்ஸ் லெபன் அணியினர் 21ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.
இச் சுற்றில் மட்டிக்கழி கதிரொளி அணியினர் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்களையும் பரிசுகளையும் இங்கு வருகைதந்த அதிதிகள் வழங்கிவைத்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.