Breaking

Post Top Ad

Thursday, September 27, 2018

இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவையிட்டு கிரிக்கட் போட்டி

மட்டக்களப்பு, இருதயபுரம் கோல்டன் ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாகவும் மறைந்த கழக உறுப்பினர் புவிராஜா வின் 14ஆவது ஆண்டை நினைவு கூரும் முகமாகவும் திங்கட்கிழமை பிற்பகல் (24.09.2018ஆம் திகதி) கருவேப்பங்கேணியில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டியில் சஸ்றைன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.


கழகத்தின் தலைவர் து.ராஜ்குமார் தலைமையில் கடந்த 22,23.24ஆம் திகதிகளில்(சனி,ஞாயிறு, திங்கள்)   நடைபெற்ற இப்  போட்டியில் கருவேப்பங்கேணி சஸ்றைன் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.


30விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்ட இப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மட்டக்களப்பு அன்ரனீஸ் கழகமும், கருவேப்பங்கேணி சஸ்றைன் கழகமும் மோதிக் கொண்டது.


முதலில் துடுப்பொடுத்தாடிய  அன்ரனீஸ் அணியினர் அனைத்து விக்கொட்  களைம் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.


தொடர்ந்து சஸ்றைன்   அணியினர் 04 விக்கட் இழப்புக்கு38 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர்.


இப் போட்டியில் 1ஆம், 2ஆம்,3ஆம், 4ஆம்  இடத்தைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டது.


இப் பரிசு வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஞானமுத்து சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை  முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages