Breaking

Post Top Ad

Monday, September 24, 2018

ஏறாவூரில் 2500 விதவைகள் குடும்பங்களுக்கு மாதாந்த ஜீவனோபாயத்திற்கான உலருணவு விநியோகம் ஆரம்பித்து வைப்பு

ஏறாவூரில் சுமார் 2500 விதவைகள் குடும்பங்களுக்கு  மாதாந்த ஜீவனோபாயத்திற்கான உலருணவு விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அவர்களினால் அவரது நஸீர் ஹாபிஸ்  பௌண்டேஷன் அறக்கட்டளை மூலம் இந்த உதவு ஊக்க உலருணவு விநியோகம் இடம்பெறுகிறது.



ஞாயிற்றுக்கிழமை 23.09.2018 ஏறாவூரிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் ஏறாவூர் மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விதவைக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 2000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா பருப்பு உள்ளிட்ட உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாகாண முன்னாள் முதலமைச்சர், விதவைகளுக்கான மாதாந்த உலருணவுப் பொதி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்து இடம்பெறுவதோடு ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages