Breaking

Post Top Ad

Thursday, September 27, 2018

மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198வது அகவை தின விழா

( வரதன் )

மட்டக்களப்பு வின்சென்ற் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் 198 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலும், புளியந்தீவு மெதடிஸ்த தேவாலயத்திலும், பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் நல்லாசி வேண்டி புதன்கிழமையன்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.


இந் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி. கரண்யா சுபாகரன்   தலைமையில் இடம்பெற்றது.

தொடர்ந்து அன்றைய தினம் பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு, கேக் வெட்டி பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு பாடசாலையின் 198 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.


இந் நிகழ்வில், பாடசாலை பிரதிஅதிபர், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துnhண்டனர். 






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages