கடந்த வருடம் இடம்பெற்ற விவசாய நிலங்களின் வரட்சிக்கான காப்புறுதி வழங்குவது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 09ஆம் திகதி அவரிடம் கோட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இந்த விவசாயக் காப்புறுதி என்பது அடிக்கடி திட்டங்கள் மாறிக்கொண்டிருக்கின்றது. ஆரம்ப காலத்தில் 1கிலோ உரம் வழங்கப்படும்போது அதற்கு காப்புறுதிக் கட்டணமாக 3ரூபா பணம் அறவிடப்பட்டு காப்புறுதிப் பணம் வழங்கப்பட்டது. சென்ற வருடம் விவசாயிகளிடமிருந்து 675ரூபா கட்டுப்பணமும் அரசாங்க மானியமான 2925ரூபாவும் அறவிட்ட வேண்டுமென சுற்றுநிருபம் கிடைக்கும் காலத்தில் எங்களது மாவட்டத்தில் அறுவடை ஆரம்பித்துவிட்டது.
இதனால் அத் திட்டத்தை அமுல்படுத்த முடியாமல் போனதால் எங்களுடைய தலைவர் உடனடியாக அமைச்சருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் காப்புறுதி செய்யாத விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்டத்திலிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற 20,650 விண்ணப்பப் படிவங்களில் 19,630 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருடம் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின்படி விவசாயிகள் காப்புறுதிக்காக எந்தக் கட்டுப்பணமும் செலுத்தவேண்டிய அவசியமில்லை.
இதில் அரசினால் வழங்கப்படும் மானிய உரம் பெறுகின்ற விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக காப்புறுதி செய்யப்படும். உரம் பெறாத காணிகளுக்கு காப்புறுதி செய்யும் விவசாயிகள் ஏக்கருக்கு 3500ரூபா வீதம் தங்களது கட்டுப் பணத்தைச் செலுத்தி காப்புறுதியினை செய்கொள்ளலாம்.
அரசாங்கத்தினால் வெள்ளம், வரட்சி மற்றும் யானையின் தாக்கம் ஆகிய சேதங்களுக்கு மாத்திரம் இலவசமாக காப்புறுதி வழங்கப்படும்.
அதேவேளை திடீரென ஏற்படும் தீ, நோய் பீடை போன்ற தாக்கங்களை எதிர்நோக்கும் விவசாயிகள் ஏக்கருக்கு 200ரூபா வீதம் கட்டுப்பணத்தை செலுத்துவதன்மூலம் அதற்கான காப்புறுதியினைப் பெற முடியும்.
எனவே காப்புறுதி செய்யவுள்ள விவசாயிகள் அனைவரும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக செய்கை ஆரம்பித்துள்ளதனால் வயல் விதைப்பு முடிந்த உடனே காப்புறுதியினை செய்துகொள்ளலாம். என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.