Breaking

Post Top Ad

Thursday, September 20, 2018

கரையோர எல்லைப்படுத்தல் செயல் திட்டம்

 (படுவான் நவா)


போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கரையோரப்பகுதிகளான பழுகாமம்- 1, 2, மாவேற்குடா, விபுலானந்தபுரம், வீரஞ்சேனை, வன்னிநகர், பெரியபோரதீவு, முனைத்தீவு மற்றும் பட்டாபுரம் போன்ற கரையோரங்களை சார்ந்த இடங்களை இனங்கண்டு எல்லைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று 20.09.2018 திகதி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இவ்வேலைத்திட்டமானது போரதீவுப்பற்று பிரதேச செயலகம், கரையோரபேணல் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் அப்பகுதி வட்டார உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், கிராம முன்னேற்ற சங்கங்களின் பங்களிப்புடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ்வேலைத்திட்டம் பழுகாமம் ஆற்றுக்கட்டு பாலத்திலிருந்து மூன்று பிரிவுகளாக ஆரம்பிக்கப்பட்டு பிரதேச செயலாளர் தலைமையில் கொக்குநாரை கரையோர வழியாகவும், உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் பெரியபோரதீவு கரையோர வழியாகவும், உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் வன்னிநகர் கரையோர வழியாகவும் சென்று எல்லைப்படுத்தும் வேலைத்திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
நீரேந்தும் கரையோர பகுதிகளிலுள்ள காணிகள் தொடர்ச்சியாக அத்துமீறி சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கரையோரங்களில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு அங்கு அதிகமாக வாழ்கின்ற பறவை இனங்களின் வாழ்விடங்கள் மிருகங்கள், நீரில் வாழுகின்ற உயிரினங்கள் போன்றவை அழிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கடந்த மாதம் விவசாயம் செய்கின்றவர்கள் வயலுக்கு மூன்று தடவைகளில் தீவைக்கப்பட்டு அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்ட போது பிரதேச சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் அங்குள்ள ஏராளமான பறவைகள், முட்டைகள், குஞ்சிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரனங்கள் கூட அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages