Breaking

Post Top Ad

Monday, August 13, 2018

பொது மக்களின் ஆதரவு இருந்தால் சட்டவிரோத நடவடிக்கைகளை இலகுவில் தடுக்க முடியும் - பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மெண்டிஸ்

பொது மக்களின் ஆதரவு இருந்தால் சட்டவிரோத நடவடிக்கைகளையும் இலகுவில் தடுக்க முடியும் -    பொலிஸ் அத்தியட்சகர்  எம்.என்.மெண்டிஸ்

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனையின்போது தெரிவிப்பு.


மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை பொலிஸ் நிலைய வளாகத்தில் திங்கட்கிழமை (13.08.2018) நடைபெற்றது.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தலைமையில் நடைபெற்ற இப் பரிசோதனை நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர்  எம்.என்.மெண்டிஸ் கலந்து கொண்டு  ஆயுதங்களின் பராமரிப்பு, வாகனப் பயன்பாடு, பொலிஸாரின் சேம நலன்கள்,  குறித்தும் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் அணிவகுப்பு மரியாதையினையும் ஏற்றுக் கொண்டார்.


பொலிஸ் பரிசோதனை நிகழ்வு முடிவுற்றதும் அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் அத்தியட்சகர் உரையாற்றுகையில்,


பொலிஸ் சேவையானது முன்னைய காலங்களைவிட தற்போது கிராமங்கள் நகரங்கள் என்று மக்கள் மத்தியில் சென்றுள்ளது. இதனால் அனைதது மக்களுக்கும் உயர்வான சேவையினை வழங்கக்கூடியதாக உள்ளது.


இவ்வாறு மக்களுக்கும் பொலிஸாருக்கும் உள்ள தொடர்புகளும் இடைவெளிகளும் நெருக்கமடையும்போது நாட்டில் ஏற்படும் குற்றச்செயல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் இலகுவில் தடுக்க முடியும். என தெரிவித்தார்.













No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages