Breaking

Post Top Ad

Tuesday, August 7, 2018

பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த உத்தியோகத்தர்களுக்கான நிகழ்நிலை(Online) பயிற்சி நெறி விண்ணப்பம் / வளதாரர்களுக்கான விண்ணப்பம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இணைந்த திணைக்களகங்களின் சேவைத்தரத்தினை தகவல் தொழில்நுட்ப சேவைகளினோடு மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அரச அதிபர்/மாவட்டச் செயலாளரின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலின்பேரில் மேற்படி பயிற்சிநெறிகளும் இணைத்தே விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டு எமது அலுவலர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.

பதவிநிலை மற்றும் இணைந்த உத்தியோகத்தர்களுக்கான (ஏலவே குறிப்பிட்டே முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலகப்பணியாளர் மற்றும் சாரதிகள் அல்லாத உத்தியோகத்தொருவர்)    பயிற்சிப் பாடத்திட்டங்களை உள்ளீர்த்ததாக இப்பயிற்சி நெறிகள்;
வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயிற்சியானது உரிய பயிற்சிசார்
விடயங்களை மாத்திரமல்லாது  ஏலவே அலுவலகங்களில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் விடுபாடுகளை நிவர்த்தி செய்வதினூடு மக்களுக்கான அரச சேவைத்தரத்தின் வினைத்திறனை மேலும் உயர்த்திக் கொள்ளும் வகையில்
ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆகவே தங்கள் திணைக்கள மேற்படி அலுவலர்களுக்கு இப்பயிற்சிநெறி மற்றும்
வளதாரருக்கான விண்ணபம் தொடர்பாக  தெரியப்படுத்தும் அவசியம்
கேட்டுக்கொள்கின்றேன். மேலும், எமது காகிதாதிகளின் செலவீனம் மற்றும்
மேலதிக வேலைப்பழுவினைக் குறைக்கும் முகமாக முற்றிலும் ழுடெiநெ முறையிலேயே
சகல விண்ணப்பங்களும் எதிர்வரும் 13.08.2018க்கு முன்னராக
சமர்ப்பிக்கும்படி சகல அலுவலர்களுக்கும் அறியத்தரும்படி வலியுறுத்திக்
கேட்டுக்கொள்கின்றேன்.

விண்ணப்பிக்க :
(https://goo.gl/forms/lC1xywSrhMqo8H4g2)
OR
http://www.batticaloa.dist.gov.lk/

மாவட்டச் செயலகத்தினால் எதிர்வரும் 15.08.2018 சகல திணைக்களசார்
விண்ணப்பங்களின் யாவும் தொகுக்கப்பட்டு உரிய சாராம்ச அறிக்கை அத்திணைக்கள தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீளசமர்ப்பிக்கப்படும். திணைக்களத்திலிருந்து மீளக்கிடைக்கப்பெறும் மாற்றீடுகள் மற்றும் விதப்புரைகளுக்கமைய  அவ்வுத்தியோகத்தர்கள் இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளத்தக்கவாறாக/வளதாரராக தமது சேவையாற்றும்  திணைக்களத்தினூடாக
மாவட்டச் செயலக பயிற்சிகளுக்காக அழைக்கப்படுவர்.

மேலும், வளதாரதாக விண்ணப்பிக்கும் அலுவலர் தனது சுயவிபரக்கோவையினை உரிய
இணைப்பில் பதிவேற்றுதல் வேண்டும். அத்தோடு தாம் விண்ணப்பிக்கும்
பயிற்சிக்கான கல்வி மற்றும் தொழிற்கல்விச் சான்றிதழ்களை தங்களின்
சுயவிருப்பத்தின்பேரில் பதிவேற்றவும் முடியும். பயிற்சிக்காலம் மற்றும்
உரிய விபரங்கள் பயிற்சியின் போது தங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
இது தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் தங்களுக்கு தேவைப்படின் எமது அலுவலரை
தயவுடன் அணுகவும்.

(0773729748 / 065-2226427 – rrajasuresh@gmail.com)


ஒப்பம்.
S.ஸ்ரீகாந்த்,
மேலதிக அரசாங்க அதிபர்,
மாவட்டச் செயலாளருக்காக,
மட்டக்களப்பு மாவட்டம்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages