Breaking

Post Top Ad

Wednesday, August 1, 2018

மது போதையிலிருந்த நடன அழகியின் மோசமான செயல் - கொழும்பில் சம்பவம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் நடன அழகியாக தொழில் புரிந்து வரும் பெண்ணொருவர் விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மதுபோதையில் இருந்த குறித்த பெண், பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த காரணத்தினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் கண்ணாடி ஒன்றை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.


அந்த பெண், களியாட்ட விடுதியில் வைத்து மேலும் இரண்டு பெண்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார்.
அங்கு ஏற்பட்ட தகராறையடுத்து, களியாட்ட விடுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட இந்த பெண்ணை அங்கிருந்த காவலாளிகள் தாக்கி வெளியில் தள்ளியுள்ளனர்.

விடுதிக்கு வெளியில் தள்ளப்பட்ட பெண், வெளியில் கிடப்பது குறித்து பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் சிலர், பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதேவேளை பெண்ணை தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக களியாட்ட விடுதியின் பாதுகாவலர் ஒருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages