Breaking

Post Top Ad

Friday, August 24, 2018

பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அபிவிருத்திக்கு தகவல்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடல்

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வட்டமேசை கலந்துரையாடல் நேற்று (23) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அரசநிறுவனங்களின் பிரதம அதகாரிகள் மத்தியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அபிவிருத்தி தகவல்களை முன்னெடுத்து செல்வதில் நிறுவனங்களை எவ்வாறு தொடர்புபடுத்துவது என்பது குறித்ததாகும்.


அரச தகவல் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்த்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முதற்கட்டமாக நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages