Breaking

Post Top Ad

Monday, August 27, 2018

"நாகர் வேட்டையில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஷ்ணா'

(ஜக்தீஸ்)

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்க்குட்பட்ட பண்டாரியாவெளி நாகர் விளையாட்டு கழகம் தனது 48 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடத்திய "நாகர் வேட்டை" என வர்ணிக்கப்படும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 25,26_08_2018 திகதிகளில் பண்டாரியாவெளி விளையாட்டு கழக தலைவர் த.காந்தன் தலைமையில்  நாடத்தி இருந்தது.


இப்போட்டியில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவு, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவு மற்றும் களுவாஞ்சிக்குடி, போரதீவு பிரதேச செயல பிரிவு ஆகிய பிரிவுக்குட்பட்ட திறமைவாய்ந்த 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி முதலாவது அரையிறுதி போட்டியில் மகிழடிதீவு மகிழை இளைஞர் அணியும் காஞ்சிங்குடா ஜெகன்  அணியினரும் கள பரீட்சை நாடத்தின இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள்  கோள் எதையும் செலுத்தாத  பட்ச்சத்தில்  தண்டனை உதைமூலம்  காஞ்சிரங்குடா ஜெகன் அணியினர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகினர்

இரண்டாது அரையிறுதி போட்டியில் விளாவெட்டுவான் ராஜா அணியினரும் முனைக்காடு இராமகிருஷ்ணா அணியினரும் கள பரீட்சை நாடத்தினர். இரு அணிகளும் குறித்த நேரத்தில் கோள் எதையும் போடத காரணத்தினால் தண்டனை உதை மூலம் பெரிதும் போரட்டத்திற்க்கு மத்தியில் முனைக்காடு இராமகிருஷ்ணா அணியினர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவாகினர்

இறுதிப்போட்டியில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகமும் கள பரீட்சை நாடத்தின இதில் முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகம் 1 கோளினை செலுத்தி 1:0 என்ற கணக்கில் "நாகர் வேட்டை" யின் வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசையும்  பெற்றுக் கொண்டது. 2ம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும் 

3ம் இடத்தினை மகிழடித்தீவு மகிழ இளைஞர் அணியும்,4 ம் இடத்தினை விளாவெட்டுவான் ராஜா விளையாட்டுகழகமும் பெற்றுக்கொண்டது.இப் போட்டியின் சிறந்த வீரராக முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழக வீரரும். சிறந்த கோள் காப்பாளராக காஞ்சிரங்குடா வீரரும் தெரிவாகினர்.

"நாகர் வேட்டையின்" சிறந்த நன்நடத்தை கழகத்திற்கான விருதை மண்முனை மேற்கு பிரதேசத்தை சேர்ந்த விளாவெட்டுவான் ராஜா விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது

இறுதியாக வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசும்  வழங்கும் நிகழ்வில் அதீதிகளாக ஆன்மீக அதீதியாக க. கோபாலப்பிள்ளை குருக்கள் (பண்டாரியாவெளி பிள்ளையார்,முத்துமாரியம்மன் தேவஸ்தானம்),பிரதம அதீதியாக M.உதயகுமார்( மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்),சிறப்பு அதிதிகளாக W.C சிசிரபண்டார (கொக்கட்டிச்சோலை பொலீஸ் பொறுப்பதிகாரி), P.சிவதயாழினி (கிராம சேவக உத்தியோகத்தர்-பண்டாரியாவெளி), கொளரவ அதீதியாக அ.சிவகுமாரன்(பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலய அதிபர்) மற்றும் பண்டாரியாவெளி ஆலய நிர்வாகங்கள்,சமூக மட்ட அமைப்புகள் பலரும் கலந்து கொண்டனர்









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages