
கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 64வது ஆண்டுத் திருவிழாவின் பாதயாத்திரை சனிக்கிழமை காலை ( 01.09.2018ஆம் திகதி) நடைபெறவுள்ளது.
இம்மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா எதிருவரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பூசை ஆராதனைகளைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
நடைபெறவுள்ள பாதயாத்திரை வழமைபோன்று இவ்வருடமும் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி வவுணதீவு ஊடாக அயித்தியமலைக்கும், செங்கலடி சந்தியிலிருந்து காலை ஆரம்பமாகி கரடியனாறு ஊடாக அயித்தியமலைக்கும் இரு வழியாக செல்லும் எனவும், இதற்கான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் குடிநீர், குளிப்பானங்கள் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. என விழா ஒழுங்கமைப்புக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திருவிழா காலங்களில் வடக்கு கிழக்கு மட்டுமல்லாமல் தென்பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதருவது வழமை, இதற்கென தண்ணீர், உணவு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட முன் ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.