மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள “நூறு ஏக்கர் தவனைக்கண்டம்” என அழைக்கப்படும் வயல்வெளிப் பிரதேசத்தில், இன்று (06) காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, எல்.எம்.ஜீ-01. ரி56 வகைத் துப்பாக்கி 01 என்பன மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர், நேற்று (05) மாலை, தமது வயலில் வரம்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது, மர்மப்பொருள் தென்பட்டதையடுத்து, வாழைச்சேனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இடத்துக்கு இன்று காலை சென்று பார்வையிட்ட பொலிஸார், ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி, அவற்றை மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர் தெரிவித்தனர்.
Post Top Ad
Monday, August 6, 2018
வயல்வெளியில் ஆயுதங்கள் மீட்பு
Tags
Batticaloa#
East#
Share This
About vettimurasu
East
Tags:
Batticaloa,
East
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.