(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாநகர சபையும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நாடாத்திய
பௌர்ணமி கலை விழா இன்று (25.08.2018) இரவு மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த பௌர்ணமி கலை விழா மாநகரசபை உறுப்பினரும் கலை,கலாசார குழத்தலைவருமாகிய வே.தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு
மாநகர முதல்வர்
தி.சரவணபவன்,
அரசாங்க அதிபர்
மா.உதயகுமார்,
மாநகர பிரதி மேயர்,மாநகர சபை உறுப்பினர்கள், ஆகிய அதிதிகள் வருகை தந்திருந்தனர்.
இந்த பௌர்ணமி கலை விழாவில்
பாலமீன்மடு, நர்தன பவனம் நாட்டியாலயா மாணவர்களின் கிராமிய நடனம் ,
ஏறாவூர் கலை இலக்கியமன்றத்தின் பரதநாட்டியம்,
விளாவட்டவான் கவின் கலைக் கழகத்தின் வாளவீமன் தென்மோடி கூத்து,
மாமாங்கம் தமிழ் கலை மன்றத்தின்" சொல்லமாட்டேன் " நகைச்சுவை நாடகம்,
போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.