Breaking

Post Top Ad

Thursday, August 16, 2018

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறையில் திடீர் மாற்றம் - நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை ஆரம்பம்

முஸ்லிம் பாடசாலைகளின் 2ஆம் தவணை விடுமுறையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டின் முஸ்லிம் பாடசாலைகளில் 2ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கப்படவிருந்தது.

அதற்குப் பதிலாக குறித்த தினத்திற்கு முன்னராகவே எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டு மீண்டும் 27ஆம் முஸ்லிம் ஆரம்பிக்கின்றன.

20ஆம் திகதிக்கு மாற்றீடாக செப்ரெம்பெர் 01ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் எதிர்வரும் 22ஆம் திகதி தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளைக் கொண்டாட விருப்பதைடுத்து கல்வி அமைச்சு 2ஆம் தவணை விடுமுறையில் மாற்றங்களைச் செய்துள்ளது.

அஞ்சல் சேவைகள் மற்றும் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே முஸ்லிம் பாடசாலைகளின் தவணை விடுமுறையில் இந்த திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages