Breaking

Post Top Ad

Wednesday, August 8, 2018

மனோ, இராதாகிருஷ்ணன், அடைக்கலநாதன் குழுவினர் கலைஞருக்கு அஞ்சலி

தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழு  இன்று (08) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


இந்த அமைச்சர்கள் குழு, இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் இரங்கல் செய்தியையும் கலைஞரின் மகளான கனிமொழியிடம் வழங்கி அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages