Breaking

Post Top Ad

Sunday, August 5, 2018

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் எட்டாவது ஆண்டாக மாமாங்கேஸ்வரர் முன்றலில்

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடாத்தப்படும் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் எட்டாவது ஆண்டாக இந்த வருட நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (5ஆம் திகதி) ஆரம்பித்துவைக்கப்பட்டது.


அங்கு நடைபெற்ற தொடக்க நிகழ்வு நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் எஸ்.ஜெயசங்கள், அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் விக்கிரமன் போன்றோர் கலந்துகொண்டனர்.


தொடர் நிகழ்வில் நகலைஞர்களை மாண்பு செய்தல் நிகழ்வைத் தொடர்ந்து ஞாபகச் சின்னம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி மூன்று கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் அமைக்கப்பெற்ற அரங்கில்  வசந்தன் நடனம், கும்மி, உடுக்கை ஒலிப் பாடல், புல்லாங்குழல் இசை, கூத்து மற்றும் 'கூத்துப் பனுவல் உருவாக்கம்' பற்றிய கலந்துரையாடலும் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

இவ் அரங்க விழா ஆற்றுகை நிகழ்வுகள் விழாக் காலங்களில்     அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில்; நடைபெறுமென கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages