Breaking

Post Top Ad

Tuesday, August 7, 2018

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக ஏ.எஸ்.எம்.பாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் தலைமையில் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணம் மற்றைய மாகாணங்களை விட சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி அடைய வேண்டும், கிழக்கில் சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரித்து மக்களின் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும், சுற்றுலாத்துறையின் மூலம் இனங்களுக்கிடையில் இன ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என பாயிஸிடம் ஆளுநர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாயிஸ் தற்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராகவும், வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages