Breaking

Post Top Ad

Saturday, August 4, 2018

மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் கிழக்கு பல்கலை நுண்கலைத்துறையினரின் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும்

(ரி.கௌரி)

நுண்கலைத்துறையினரால் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்  நடாத்தப்படும் பாரம்பரிய அரங்க விழாவும் கண்காட்சியும் - 2018 இந்த வருடம் 05.08.2018 – 07.08.2018 ஆம் திகதி வரையான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில்

05.08.2018 – காலை 10.00 மணிக்கு தொடக்க நிகழ்வு. நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமாரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் அதிதிகள் உரை, கலைஞர்களை மாண்பு செய்தல், ஞாபகச் சின்னம் வழங்குதல், பொன்னாடை போர்த்துக் கௌரவித்தல், நுண்கலைத்துறையினரின் கலைநிகழ்வு என்பன நடைபெறும். 20க்கு மேற்பட்ட அண்ணாவிமார் பங்குபற்றவுள்ளனர்.

அடுத்த நிகழ்வு – மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும். இதில் - 'கூத்துப் பனுவல் உருவாக்கம்' பற்றிய கலந்துரையாடலும், வசந்தன்; கூத்தும், சத்தியவான் சாவித்திரி (தென்மோடி கூத்;து) 05.08.2018 யில் இடம் பெறவுள்ளது.

இரண்டாம் நாள் - 'கூத்து உடுப்பு, உருவாக்கலும், கட்டுதலும் அதன் சமகால போக்கும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும், மகிடிக் கூத்து, 'ஆரவல்லி சூரவல்லி வீரவல்லி' என்ற வடமோடிக் கூத்து 06.08.2018இல் இடம்பெறவுள்ளது.

மூன்றாம் நாள் - 'பாரம்பரிய இசைக்கருவிகளின் உருவாக்கமும் சவால்களும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் 'ஏமாற்றாதே ஏமாறாதே' 'வல்லவனுக்கு வல்லவன்' என்ற நகைச்சுவை கூத்துக்களும், 'வாளவீமன் நாடகம்' எனும் தென்மோடிக் கூத்தும், 07.08.2018 அன்று இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வுகளின் களரிகளாக பாரம்பரியக் கூத்து அரங்கில் செயற்பட்ட மூத்த அண்ணாவிமார்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதில் அண்ணாவியார் மானாகப்போடி களரி, அண்ணாவியார் அரசரட்னம் களரி, அண்ணாவியார் யக்கமுத்து சீனித்தம்பி களரி என்பன குறிப்பிடத்தக்கன.

 இந் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என நுண்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages