Breaking

Post Top Ad

Monday, August 20, 2018

தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக தண்ணீரைப் போத்தலில் அடைக்கும் சமாச்சாரத்தைக் கையிலெடுத்துள்ளார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக தண்ணீரைப் போத்தலில் அடைக்கும் சமாச்சாரத்தைக் கையிலெடுத்துள்ளார்கள் ஒரு சில அரசியல்வாதிகள், ஆனால் இது சட்டம் ஒழுங்கு தெவையற்றது என பொதுமக்களை தவறாக வழிநடாத்தும் செய்ற்பாடாகும் என கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 5வது சதொச விற்பனை நிலையம் ஏறாவூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை 19.08.2018 திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் அவர் உரையாற்றினார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச அமைப்பாளரான எம்.எல். அப்துல்லத்தீப் தலைமையில், இடம்பெற்ற இந்த நிகழ்வில்  செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரதியமைச்சர் அமீரலி பதிலளித்தார்.

மட்டக்களப்பு பெரியபுல்லுமலை போத்தலில் தண்ணீர் அடைக்கும் தொழிற்சாலை விவகாரம் சம்பந்தமாக உங்களின் அபிப்பிராயம் என்ற என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

அந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த பிரதியமைச்சர் அமீரலி,

இந்த நாட்டிலே சட்டபூர்வமான எந்த உற்பத்திகளையும், தொழில்துறைகளையும் சட்ட ரீதியான அனுமதியோடு நடைமுறைகளோடு செய்வதற்கு இந்நாட்டில் வாழும் எல்லோருக்கும் உரிமை உண்டு. இதனை எவரும் தடை செய்ய முடியாது.

எனவேஇ இந்த மாவட்டத்திற்குள்ளேயே தண்ணீரை சுத்தம் செய்து போத்தலில் அடைத்து விற்கும் உற்பத்தி முயற்சியை நான் வரவேற்கிறேன்.

அதேபோன்று குடிதண்ணீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் உற்பத்தித் தொழில்துறையிலும் எவரும் ஈடுபடலாம்.

ஏற்கெனவே, வெளியிடங்களிலிருந்தும் பல நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் செய்து குடிதண்Pரைப் போத்தலில் அடைக்கும் உற்பத்தியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, வெளியூர்களிலிருந்து தண்ணீரை போத்தல்களில் அடைத்து இங்கே கொண்டு வந்து விற்கும்பொழுது இந்த மாவட்டத்திலுள்ளவர்கள் வாங்கிக் குடிக்க முடியும் என்றால் ஏன் இந்த மாவட்டத்திலே தண்ணீரை அடைத்து விற்பனை செய்ய முடியாது வாங்கிக் குடிக்க முடியாது என்கின்ற கேள்வி எழுகின்றது.

மேலும்இ தண்ணீர் போத்தலில் அடைப்பதை நிறுத்தவேண்டும் என்று கூக்குரலிடுகின்றவர்கள் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கிப் பருகுவதை உடனடியாக நிறுத்தி விட்டார்களா என்று அறிய விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரியபுல்லுமலையில் குடிதண்ணீர் உற்பத்தித் தொழிற்சாலை ஆய்வு அடிப்படையில் சகல விதமான சட்ட அங்கீகாரங்களோடும்தான் துவங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால்இ ஒரு சில அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைக்காக இதனைப் பயன்படுத்தி மக்களை உணர்ச்சியூட்டி மீண்டும் அரசியல் கால களத்தில் குதிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அண்மைக்காலமாக இத்தகைய குரோதநச் செயற்பாடுகளை முடுக்கி விடுவதில் அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகி;னறார்கள்.

எனவேஇ இந்த தருணத்தில் மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் மிகவும் பொறுப்போடும் பொறுப்புணர்வோடும் செயற்பட வேண்டும்.

அரச நிருவாக திணைக்களங்கள், சபைகள்இ பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அனைத்து விதமான அதிகாரபூர்வ நிறுவனங்களும் சாதக பாதக விளைவுகளை ஆய்வு செய்து சரிபார்த்து பாதகங்கள் ஏதும் இல்லை என்று சரிகண்ட பின்னர் சட்டப்படி அனுமதி வழங்கி இருக்கின்றன.

எனவே. இத்தகைய நடைமுறைகள் இருக்கும்போது இப்படி எதையுமே நாங்கள் கணக்கிலெடுக்க மாட்டோம் என்று பொதுமக்களை பிழையாக வழிநடாத்தினால் மறுதலையில் சட்டப்படியான எந்த நடைமுறைகளும் இந்த மாவட்டத்திற்குத் தேவையில்லை என்று கேரி;க்கை விடுப்பதாக ஆகிவிடும்.

அவ்வாறென்hறல் மட்டக்களப்பு மாவட்டத்தரில் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்த முடியாது எந்த சட்டபூர்வ வழிமுறைகளும் தேவையில்லை என்று நிருவாகங்களை இழுத்து மூடிவிடச் சொல்ல வேண்டும் எனும் தோரணையில் மக்களைத் தூண்டி விடும் அந்தப் போக்கு அமைந்திருக்கின்றது.' என்றார்.No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages