Breaking

Post Top Ad

Thursday, August 16, 2018

சிங்கள மயமாக்கப்படும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!! பேசமுடியாமல் தவிக்கும் தமிழ் நோயாளிகள்!!

எனக்கு சிங்களம் ஆங்கில் பேசத் தெரியாது அந்த வைத்தியருக்கு தமிழ் பேசத் தெரியாது அந்த இடத்தில் சிகிச்சை பெறச் சென்ற நான் பேச வாயிருந்தும் ஊமையாக கைப்பாசை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியது.என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் சிகிச்சை பெறச் சென்ற நோயாளி ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்று மற்றுமொரு நபர் தனது முகநூலில் கருத்து வௌியிடுகையில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று எனது காலில் ஏற்ப்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற சென்றேன் என்னை சோதனை செய்த வைத்தியர் சிங்கள மொழியில் உரையாடினார் அங்கு மொழி பெயர்ப்புக்கு யாரும் இல்லை அது போன்று மாத்திரைகள் வழங்குபவரும் சிங்களத்திலே உரையாடினார் .

அதே போன்று X ray பெறுவதற்க்காக சென்றேன் அங்கும் சிங்கள மொழி இவ்வாறு மிக முக்கியமான வைத்தியத்துறையில் மொழிப்பிரச்சனை ஏற்ப்படுவது மிக கவலை தருகின்றது சாதரன மக்களின் நிலையை உணர்ந்து புதிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இவ் விடயத்தில் கவனம் செலுத்தும் படி வேண்டுகின்றோம். என  இவர்கள் தெரிவித்துள்ளனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages