Breaking

Post Top Ad

Thursday, August 16, 2018

ஏறாவூர் பிரதேசத்தில் தெரு நாய்களுக்கு விலங்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மும்முரம்


ஏறாவூர் நகர  பிரதேசத்தில் அதிகரித்துள்ள தெருநாய்களை விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றி அதன்மூலம் மனிதர்களை விசர் நாய்க்கடியிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக ஏறாவூர் நகர பிதா இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.


தெருநாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றப்படும் விடயமாக வியாழக்கிழமை 16.08.2018 மேலும் கருத்துத் தெரிவித்த நகர பிதா,


இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையில் இதுவரை சுமார் 50 இற்கு மேற்பட்ட அலைந்து திரியும் தெருநாய்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு ரேபீஸ் எனப்படும் விலங்கு விசர் நோய் ஏற்படாத வகையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் - புன்னைக்குடா வீதியில் சமீப நாட்களில் பொதுமக்கள் விசர்நாய் கடிக்கு உள்ளானதை கருத்தில் கொண்டு ஏறாவூர் நகர சபையும் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அதிகாரிகளும் இணைந்து இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புன்னைக்குடா வீதி பொதுச்சந்தை, தற்காலிக பொதுச்சந்தை, விலங்கறுமனை, ஏறாவூர் பொலிஸ் நிலையம், பெண்கள் சந்தை, வாவிக்கரைப் பகுதி,  திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைய சுற்றுவட்டாரம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 50 தெரு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படடுள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக அடுத்து வரும் தினங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அலைந்து திரியும் தெரு நாய்களை விரட்டிப் பிடித்து ரேபீஸ் விலங்கு விசர் நோய்  தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் நகர பிதா கூறினார்.

இது விடயமாக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வருமுன் காப்பதே சிறந்தது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages