வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
அவ்வாறாயின் அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள்.
ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்கினேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு மணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள்.
அங்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்டு இங்கே வந்து நாடகமாடுகிறார்.
இதேவேளை, பொருளாதார வளம் இல்லாத ஊவா மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
ஆனால் வட மாகாணம் 1.2 வீத பங்களிப்பையே வழங்குகிறது எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.