இந்த விடயம் தொடர்பாக தான் உயர்மட்ட அதிகாரிகளினதும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை 28.08.2018 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, யுத்தம் இடம்பெற்றபோது கூட எதிர்கொள்ளாத இனத்துவேஷ நெருக்கடி இப்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளை மனிதர்களுக்கு வழங்குவதிலும் சில அதிகாரிகள் இனப்பாகுபாட்டின் அடிப்படையில் நடந்துகொள்வது மானிட தர்மத்துக்கே ஏற்காதது.
பசித்தவருக்கு உணவையும் தாகித்தவருக்கு குடிக்க தண்ணீரையும் வழங்க எந்த மதங்களும் தடைவிதிப்பதில்லை.
ஆனால், இத்தகைய உயர்ந்த மானிட விழுமிய தர்மப் பண்புகளுக்கு விரோதமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் சில அதிகாரிகள் நடந்து கொள்வது வேதனையளிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் தமது சுய விருப்பத்திற்கு மாறாக இடம்பெயரச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தற்போது சுமுக நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பி தமது பழைய இடங்களுக்குத் திரும்பும்போது அதிகாரிகள் அவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு மறுத்து வருகின்றார்கள்.
மேலும், குடிநீருக்கான தேவையைக் கூட நிவர்த்தி செய்து கொடுக்க முடியாது என அவர்கள் தடை விதித்து இனப்பாகுபாடு காட்டுவது இழிவான ஒரு செயலாகக் கருத வேண்டியுள்ளது.
இனநல்லுறவைச் சீர்குலைக்கும் அரச அதிகாரிகள். நீர் வளம், கடல், குளம், நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கின்றார்கள்.
மக்களின் வாழ்வாதாரங்களான மீன்பிடி, விவசாயம், வியாபாரம் போன்றவற்றில் இந்த இனத்துவேஷத் தடை காணப்படுகின்றது.
மீள்குடியேறும் மக்களுக்கு வாழ்வாதாரம் மிக முக்கியமானதாகும்.
மக்களது அலுவல்களை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடிக்கின்ற, பிற்போடுகின்ற தாமதிக்கின்ற மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற அலைக்கழிக்கின்ற, பூர்த்தி செய்ய முடியாத நிபந்தனைகள் விதிக்கின்ற போக்கை அதிகாரிகள் பாகுபாட்டின் அடிப்படையில் கைக்கொள்கின்றார்கள்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியிலும் யுத்த காலத்திலும் கூட அங்குள்ள இயற்கை வளங்களை அடுத்து வாழும் சமூகத்தாரோடு பகிர்ந்துண்டு வாழ்ந்தார்கள்.
இதற்குத் தெளிவான வரலாறுகள் உண்டு. ஆயினும் இவற்றில் எதனையும் சீர்தூக்கிப் பார்க்காது அதிகாரிகள் இனத்துவேஷத்துடன் நடந்துகொள்வது சமாதான சகவாழ்வுக்கு ஒரு பெரியாக பின்னடைவாகும்.
எனவே, இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். என்றார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.