Breaking

Post Top Ad

Friday, August 24, 2018

உலகில் அதிகளவில் காணாமல் போனவர்களின் நாடாக இலங்கை

நாட்டில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் அநே­க­மானோர் காணாமல்போயுள்­ளனர். இவ்­வாறு காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்­கையை பரி­சீ­லிக்கும் போது ஆசி­யாவில் மாத்­தி­ர­மன்றி, உல­க­ளா­விய ரீதி­யி­லேயே அதி­க­மானோர் காணாமல் போயுள்ள நாடாக இலங்கை உள்­ளது.முன்­னைய ஆணைக்­கு­ழுக்­களின் மூலம் பெறப்­பட்ட தர­வுகள் மற்றும் தற்­போது பெறப்­பட்­டுள்ள தர­வு­களின் அடிப்­ப­டையில் இரு­ப­தா­யி­ரத்­துக்கும் அதி­க­மானோர் காணாமல் போயுள்­ளனர் என்று காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரி­வித்தார்.


காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு எதிர்­வரும் 30ஆம் திகதி காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது. அந்­நி­கழ்வு தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் வகை­யி­லான ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அச்­சந்­திப்பின் போதே சாலிய பீரிஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

காணா­மல்­போனோர் அலு­வ­லகம் எதிர்­வரும் 30ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள நிகழ்வு தொடர்­பாக அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

காணாமல் ஆக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ரான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிகழ்­வொன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது. இந்­நி­கழ்வில் மனித உரிமை ஆணை­யாளர் தீபிகா உட­கம விசேட உரை­யாற்­ற­வுள்­ள­துடன், காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இந்த நிகழ்வு ‘’காணா­மல்­போதல் இனி நிக­ழக்­கூ­டாது” எனும் தொனிப்­பொ­ருளில் இடம்­பெ­ற­வுள்ள அதே­வேளை, காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்­தினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யொன்றும் வெளி­யிட்டு வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இது ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் கைய­ளிக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­வரை காலமும் காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நடத்­தி­யி­ருந்த மக்கள் சந்­திப்­புக்­களில் இருந்தும், சிவில் சமூக அமைப்­புக்­க­ளு­ட­னான சந்­திப்­புக்­களில் இருந்தும், காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் அனு­ப­வங்­களில் இருந்தும் ஆரா­யப்­பட்டுக் கண்­ட­றி­யப்­பட்ட பரிந்­து­ரைகள் உள்­ள­டங்­கி­ய­தாக மேற்­படி அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­றிக்­கையில் குறிப்­பாக காணா­மல்­போ­னோரின் குடும்­பங்­க­ளுக்­கான நிவா­ர­ணத்­தொகை, உண்­மையைக் கண்­ட­றிதல் மற்றும் காணா­மல்­போ­னோரின் குடும்­பத்­தி­ன­ருக்­கான நீதியைப் பெற்­றுக்­கொ­டுத்தல் ஆகிய விட­யங்கள் தொடர்பில் பரிந்­து­ரைகள் இடம்­பெற்­றுள்­ளன.

2018 ஆம் ஆண்டில் காணா­மல்­போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­ட­துடன், வலிந்து காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காக்கும் சட்­டமும் நிறை­வேற்­றப்­பட்­டது. எனவே காணா­மல்­போதல் தொடர்பில் முக்­கிய செயற்­பா­டுகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள இவ்­வாண்டில், இனி­மேலும் காணா­மல்­போதல் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்த வேண்டும் எனும் நோக்­கி­லேயே இந்­நி­கழ்­வினை ஏற்­பாடு செய்­துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages