
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வமான சனிக்கிழமை (04) மாலை விஜயம் மேற்கொண்ட என நீர்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸ்ஸாநயக்க உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்ட விவசாயிகளை ஆயித்தியமலைப் பகுதியில் நேரில் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
உன்னிச்சை நீர்பான திட்ட முகாமைத்துவக்குழுத் தலைவர் கே.யோகவேல் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நீர்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸ்ஸாநயக்க, பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, நீர்பாசன பணிப்பாளர் நாயகம் எஸ்.மோகன்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.அஸார், உன்னிச்சை திட்ட பொறியியலாளர் பார்த்தசாரதி, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் நா.கதிரவேல் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு உன்னிச்சை நீர்பாசனக் குளத்தின் வான் கதவுகள் கடந்த மே மாதம் 24ஆம் திகதி சடுதியாகத் திறக்கப்பட்டதனால் சுமார் 6000 ஏக்கர் சிறுபோக வேளாண்மை அழிவடைந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உன்னிச்சைத் திட்டத்திற்குப் பொறுப்பான பொறியலாளர் மீது அதிப்பதியடைந்த விசவாயிகள் அவரை இடமாற்றி விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள பொறியியலாளர் நியமிக்க வோண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
உன்னிச்சைக் குளத்தின் நீரினை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யப்படாமை தொடர்பாக காரணங்களை ஆராய்வதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இங்கு நீர்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸ்ஸாநயக்க பதிலளிக்கையில் - உன்னிச்சசை விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கான குழு அமைக்கப்பட்டு உண்மை கண்டறியப்படும்.
விவசாயிகளும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் கடந்த காலங்களில் ஏற்பட்ட மனஸ்தாபங்களை மறந்து பரஸ்வரம் விட்டுகொடுப்பு நடந்துகொள்ளவேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் இது தொடர்பாக உன்னிச்சை நீர்பான திட்ட முகாமைத்துவக்குழுத் தலைவர் கே.யோகவேல் தலைமையில் நீர்பாசன திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டுங்கள் பாதரிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுவங்க எடுக்கப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டதில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளேன்' என்றார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.