ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை ஒன்று சேர்பதற்கான புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கும் அக்கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க செப்டெம்பர் மாத இறுதியில் புதிய கட்சியை அறிவிக்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “தற்போதைய அரசியல் களத்தில் பெரும் இடைவெளியொன்று தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள், விலக்கப்பட்டவர்களுக்கான புதிய அரசியல் களமொன்று அவசியப்படுகின்றது” என்றார்.
இவ்வாறான, “கட்சியொன்றின் தேவையை உணர்ந்துள்ளனர் ஐ.தே.க வின் உறுப்பினர்கள் பலர், கிராம மட்டத்தில் உள்ளனர். மறுமுனையில் ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றை விரும்பாத இளைஞர்கள் குழுவொன்றும் உள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்டவர்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் பயணம் ஒன்றிறைத் தொடர்வதாக தீர்மானித்தே புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளேன்” என்றார்.
Post Top Ad
Monday, August 13, 2018
திஸ்ஸவின் புதிய கட்சி அடுத்தமாத இறுதியில் உதயம்
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.