Breaking

Post Top Ad

Thursday, August 23, 2018

மட்டக்களப்பு தேசிய கல்வியக் கல்லூரியில் பசுமைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் பசுமைப்படுத்தல் வேலைத்திட்டம் கல்லூரியின் வளாகத்தினுள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் பசுமைப்படுத்தல் வேலைத்திட்டமானது கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டல்கள்,ஆலோசனை மூலம், நிதியும் நிர்வாகத்திற்கும் பொறுப்பான உப பீடாதிபதியுமான கி.புண்ணியமூர்தி அவர்களின் சிறப்பான ஒழுங்குப்படுத்ல்களுடன் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.


இதன் முதற்கட்டமாக கல்லூரிக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த விரிவுரையாளர்களின் ஒத்துழைப்புடன் பிரதான வீதியுடன் இணைந்த 800மீற்றர் அகலமான கல்லூரியின் முகப்பு பகுதியை அழகுபடுத்தும் பொருட்டு 400பூங்கன்றுகளை நடும் நிகழ்வு வியாழக்கிழமை (23.08.2018)மட்டக்களப்பு தேசிய கல்வியக்கல்லூரியின் பீடாதிபதி திரு.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிதியின் நிர்வாகத்திற்குமான உப பீடாதிபதி கி.புண்ணியமூர்த்தி,விரிவுரையாளர்களான எஸ்.லோகராசா,கே.சசிகாந்,மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்கள்.கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்து அமைவாக பேண்தகு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நாடளாவி ரீதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.இதற்கமைய பசுமைபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages