இங்கு யார் நல்லவன், யார் கெட்டவன்....
===================================
அன்பான உறவுகளுக்கு,
நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லதவன் அத்துடன் எந்த அரசியல்வாதிக்கும் ஆதரவு வழங்காதவன். ஆனால் தமிழ்மீது பற்றுக் கொண்டவன்.
நான் பெரும்பாலான சமயங்களில் முகநூல்களை பார்ப்பதுண்டு.
எனது ஆதங்கம் அல்லது கேள்வி என்னவென்றால்,
தமிழர்களுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வினை அரசாங்கம் நினைத்தால் மட்டுமே வழங்க முடியும். அல்லது சர்வதேச அழுத்தத்தின் மூலம் அத் தீர்வினை வழங்கலாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டாம், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை இவ்வாறான பல கருத்துக்களை பலர் முகநூல் ஊடாகவும், நேரடி யாகவும் விமர்சித்து வருகின்றார்கள்.
சம்பந்தன் அரசியலை விட்டு வௌிறவும் என்று பலர் சொல்கின்றார்கள். இவ்வாறு கூட்டமைப்பினரை பற்றி பலர் பலவாறும் விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
1. தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வினை அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்டிருக்கும் தீர்வினை) இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாவிட்டால் யாரால் கேட்க முடியும்.
மஹிந்தவின் ஆதரவைப் பெற்ற ரி.எம்.வி.பி கேட்குமா?. அரசாங்கத்திற்கு எப்போதும் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் ஆனந்தசங்கரி கேட்பாரா?. அல்லது அல்லது வேறு கட்சியினர் கேட்பார்களா?.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பதை அவர்கள் கொடுப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாவிடின் நிலமை தலைகீழாகும் என்பதை பலர் விளங்கிக்கொள்ளவில்லை.
2. அடுத்து, எதிர்கட்சி தலைவர் பதவி என்பது, தற்போது இலங்கையில் கூட்டாட்சி நடக்கின்றது( ஐ.தேசிய கட்சியும் ஶ்ரீ.சுதந்திர கட்சியும்) இவர்கள் இருவரும் இரு கட்சியும் ஆட்சி செய்தால் தானாகவே அடுத்தபடியாக இருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்புதான் பெரும்பான்மை, ஆதலால் யார் என்ன சொன்னாலும் இவர்கள்தான் எதிர் கட்சி, இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுப் பெறவில்லை பாராளுமன்றம் வழங்கியதை பெற்றுக்கொண்டனர்.
3. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அபிவிருத்தி எதுவும் செய்யப்படவில்லை என கூறுகின்றார்கள். உண்மைதான். முன்னைய காலங்களைப்போல் தற்போது அபிவிருத்தி நடக்கவில்லைத்தான்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருக்கும் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இவ்வாறுதான் அமைந்திருக்கும். அல்லது இன்னுமொன்றை செய்திருப்பார்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து ஒரு அமைச்சர் பதவியை எடுத்துக்ெகாண்டு தற்போது நடக்கும் அபிவிருத்தியைவிட சற்று கூடுதலாக செய்திருப்பார்கள் அவ்வாறு செய்தால் அரசாங்கம் செல்லும் (காணி, வளங்கள், அதிகாரம்) எல்லாத்திற்கும் தலையாட்டிக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.
இவைகளை செய்திருக்கலாம்.
மற்றது அந்தக் காலத்தில் யுத்தம் முடிந்த காலகட்டத்தில் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவை மிக மிக அதிகம் இருந்தது.(வடக்கு கிழக்கில்) அதற்காக சர்வதேச அமைப்புக்கள், நாடுகள் எல்லாம் நிதியை வாரி வழங்கியது அந்த நிதியைக் கொண்டு அபிவிருத்தியை செய்தார்கள். பகிடி என்னவென்றால் இதற்கென கிடைத்த நிதியில் இலங்கை பூராவும் அபிவிருத்தியை செய்துள்ளது அரசாங்கம்.
நாம் நினைக்கின்றோம் அந்தக் காலகட்டத்தல் நமது மாகாணத்தில் மட்டும்தான் அபிவிருத்தி நடந்தது என்று அப்படியல்ல , காபெட் றோட் எல்லா இடங்களிலும் போடப்பட்டது. அதைவிட பெரியபெரிய அபிவிருத்திகள் தென்பகுதி, அம்பாந்தோட்டை எல்லாம் நடந்துள்ளது.
இது பலருக்கும் தெரிந்த விடயங்கள்தான் ஆனால் தற்போது அதிகம்பேர் முன்பு நடந்தவைகளையெல்லாம் மறந்துவிட்டனர்.
அப்போது முதலமைச்சராக இருந்த பிள்ளையான் சில அபிவிருத்திகளை எம் இனத்தின் தேவைகருதி துணிவுடன் செய்துள்ளார் என்பதும் உண்மை.
சிலர் தற்போது கூறுகின்றார்கள், அந்த காலகட்டத்தில் கிழக்கில் செய்த அபிவிருத்தியைப்போல் இன்னுமொரு மடங்கு செய்திருக்கலாம் என்று கூறுகின்றார்கள்.
கடந்த காலத்தில் ஆட்சிசெய்த அரசாங்கங்களால் தமிழினம் பலதடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மக்கள் நினைப்பதுபோல் எதையும் செய்யமுடியாது. அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் இடத்தில் வேறு ஒரு கட்சி இருந்தாலும் எதையும் செய்துவிட முடியாது. இதுதான் நிதர்சனம்.
முகநூல் நண்பர் - சபா
Post Top Ad
Saturday, August 25, 2018
இங்கு யார் நல்லவன், யார் கெட்டவன்.... ஒரு முகநூல் நண்பனின் கருத்து
Tags
Batticaloa#
North#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
North,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.