Breaking

Post Top Ad

Friday, August 17, 2018

வரட்சியினால் கிணற்று நீர் வற்றியதால் குடி நீருக்காக சிரமங்களை எதிர்கொள்வதாக ஆயித்தியமலை - நெடியமடு பிரதேச மக்கள் தெரிவிப்பு.

(ஜக்தீஸ்)

மட்டக்களப்பு- மண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆயித்தியமலை மற்றும் நெல்லூர் கிராமசேவகர் பிரிவிற்க்குட்பட்ட  மக்கள் வரட்சி காரணமாக கிணற்று நீர் வற்றியமையால்  குடி நீர் இல்லாமல்  பெரிதும் அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.


மேலும் இப்பகுதியில் மணிபுரம், ஆறாம்கட்டை, கற்பானை, நெல்லூர், ஆயித்தியமலை - வடக்கு, ஆயித்தியமலை- தெற்க்கு, உன்னிச்சை போன்ற ஊர்களை சேர்ந்த பலநூற்றுக்கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் குடி நீர் இல்லாமையால் நாளாந்த  தேவைகளுக்கு சாவால்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கின்றனர் .

தங்களுக்கான குடி நீர் ஆனது மண்முனை மேற்கு பிரதேச சபையினால் தினமும் இரண்டு தடவைகள் நீர் தாங்கி வாகனங்கள் மூலம் வழங்கப்படுகின்ற போதிலும் அவற்றை பெற்றுக்கொள்ளவதில் சிரமங்கள் ஏற்ப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

இப்பகுதியில்(உன்னிச்சை) இருந்து பல பிரதேசங்களுக்கு குடி நீர் குழாயினுடாக வழங்கப்படுகின்ற போதிலும் இப்பகுதி மக்களுக்கு இதுவரை குழாய் நீர் வசதி வழங்கப்பாடாமையால் இப் பகுதிவாழ் மக்கள் அதிருப்தி அடைவதாக தெரிவிக்கின்றனர். மேலும் அரசாங்கத்தினால் குழாய் நீர் வசதிகள் வழங்குவதாக அரசியல்வாதிகள் வாக்களித்த போதில் இதுவரை அதற்க்கான வேலைப்பாடுகள் இடம்பெறவில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages