Breaking

Post Top Ad

Wednesday, August 8, 2018

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீட்டு

திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில்,  இன்று  (08ம் திகதி) மாலை 04.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இந்த இறுவட்டானது, திருக்கோவில் ஏ.எஸ்.கே.திருவதிகைக் கலைக்கூடத்தின் வெளியீடாக வருவதுடன், இறுவட்டிலுள்ள அனைத்துப் பாடல்களையும், திருக்கோவிலைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.கார்த்திகேசு எழுதி உருவாக்கியுள்ளதுடன், பாடல்களுக்கான இசையை, பிரம்மஸ்ரீ இரா. நீதிராஜசர்மா வழங்கியுள்ளார்.

பாடல்களை, கின்னஸ் பாடுநிலா உலகப்புகழ் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மற்றும் ஸ்டான்லி (இந்தியா), நிவாசின் சக்திவேல் (இந்தியா), நீதிராஜசர்மா, நீ.குருபரன்சர்மா (இலங்கை) ஆகியோர் பாடியுள்ளனர்.

இவ்வெளியீட்டு விழாவின் ஆசிர்வாதப் பூஜைகளை, ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் நடத்தி வைக்கவுள்ளார்.

நிகழ்வில் ஆன்மீக அதிதியாக, இந்தியா தபோவனம் ரிஷிகேசம் இமயமலை சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் கலந்து கொள்வதுடன், பிரதம அதிதியாக, நிதியமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் கலந்துகொள்ளவுள்ளார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages