
நல்லாட்சி அரசாங்கத்தின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 67ஆவது பிறந்தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் முன்னணியின் பூரண அனுசரணையிலும்,மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரின் ஏற்பாட்டிலும்,மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடைபெறும் "ஜனாதிபதி சவால் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி" ஆரம்பிப்புவிழா வெள்ளிக்கிழமை(31.8.2018) மாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் வீ.எஸ்.சுஜாந் தலைமையில் நடைபெற்ற ஆரம்பிப்பு விழாவில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார,தென்மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பியசேன கமகே அவர்களும்,மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் ரீ.சரவணபவான்,மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் தலைவருமான எஸ்.சசிகரன்,மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்ட சங்கத்தின் பொருளாளர் எம். பீ.குகாதரன்,செயலாளர் ரீ.காந்தன்,காற்பந்தாட்ட முகாமையாளர் ஏ.குலேந்திரன்,சுற்றுப்போட்டி குழுத்தலைவர் பீ.மேர்வின் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது அதிதிகளை மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.காற்பந்தாட்ட ஆரம்பிப்பு சமரில் மைக்கல்மென்,மற்றும் ரெட்ணம் அணியினரும் மோதிக்கொண்டார்கள். ஜனாதிபதி சாவால் கிண்ண சுற்றுப்போட்டியில் 21 காற்பந்தாட்ட அணியினர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.