மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம் விஜயரூபன்(34வயது) என்னும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் இவர் தனியார் இணைய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் கடமையாற்றுவதுடன் பல்வேறு துறைசார் கலைஞராகவும் அண்மைக்காலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.