Breaking

Post Top Ad

Tuesday, August 7, 2018

தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம்

 (ஜக்தீஸ்) 
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த போதிலும் இத் தொழிற்சாலை அமைப்பதை தடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகின்றது.


தற்போது இப் பிரதேசத்தில் கிணறுகளில் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில், இங்கு இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் அவ்பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்ச படுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேசம் பாலைவனமாகும் நிலை ஏற்ப்படும் என்ற ஐயத்தில் பொதுமக்கள் காணப்படுகின்றனர்.

பல்வேறு வழிகளிலும் பொதுமக்கள் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு சுதந்திர கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரேதச பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்(அமல்)அவர்களும் பல வழிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்க இத்தொழில்சாலை அமைப்பதற்கு காத்தான்குடி சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிரப்தி  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தொழிற்சாலையை  நிறுத்துவதற்க்கும் இதன் விளைவுகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த  எதிர்வரும் 09.08.2018 வியாழக்கிழமை   காலை 10 மணிக்கு புல்லுமலை தண்ணீர் தொழில்சாலைக்கு  முன்பாக  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages