பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றின் முன் சில்லொன்று, பஸ்ஸை விட்டுவிட்டு, தனியாக கழன்று ஓடிய சம்பவமொன்று மீகொட உடகேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதென மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸிலிருந்து கழன்று ஓடிய, அந்த சில்லு, பஸ்ஸின் வலதுபுறமாக வீசுபட்டு, மிகவேகமாக உருண்டோடி, வீதிக்கருகிலிருந்த தனியார் நிறுவனமொன்றின் படலையில் மோதியுள்ளது. இதனால், அந்த படலையும் கழன்று விழுந்துள்ளது. எனினும், இதனால், யாருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.
ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான மேற்படி பஸ், இங்கிரிய நகரிலிருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு, புறக்கோட்டை நோக்கி பயணிக்கும்.
அவ்வாறு பயணித்துகொண்டிருந்த போது, மீகொட வட்டரெக்க பிரதேசத்தில் வைத்து, பஸ்ஸில் ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டுள்ளமை பஸ்ஸின் சாரதிக்கு தென்பட்டுள்ளது.
அதுதொடர்பில், பஸ்ஸின் நடத்துனருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், பஸ்ஸில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உடனடியாக கண்டுகொள்ள முடியாமல் போனமையால், வேகத்தை குறைத்தே பயணித்துள்ளார். இதனால், ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
Post Top Ad
Monday, August 13, 2018
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.