என்ன காரணத்திற்காக உடலை முழுமையாக மறைக்கும் ஆடையுடன் ஆண் ஒருவர் திரிந்தார் என பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை தற்போது வெலிக்கடை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வெலிக்கடை ப்லாஸா பொது சந்தை கட்டட தொகுதிக்கு அருகில் நின்ற நிலையில் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
முச்சக்கர வண்டியில் வந்த இந்த நபர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டமையினால் அவர் கைது செய்யப்பட்டார்.
முச்சக்கர வண்டி சாரதி வழங்கிய தகவலுக்கு அமைய சோதனையிட்ட போது அவர் ஆண் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் பலரிடம் கடன் வாங்கிய நிலையில் அதனை செலுத்த முடியாத நிலையில் இருந்தமையினால் இவ்வாறு மறைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
உடலை முழுமையாக மறைக்கும் உடையாக ஹபாயா உள்ளமையினால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்த ஆடையை அதிகம் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இலக்கு வைத்து மேற்கொண்ட விசாரணையில் இந்த நபர் சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.