கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் பாரம்பரிய இசைக்கருவிகளின் கண்காட்சி கூடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (5ஆம் திகதி) திறந்துவைக்கப்பட்டது.
நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் எஸ்.ஜெயசங்கள், மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் த.விக்கிரமன் மற்றும் துறைசார் விரிவுரையாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப் பாரம்பரிய இசைக் கருவிக் கூடம் எட்டாவது வருடமாக இவ் வருட்ட காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 7ஆம் திகதி செவ்வாய்கிழமை வரை தொடர்ச்சியாக இக் கண்காட்சியுடன் பாரம்பரிய அங்கே அமைக்கப்பெற்ற அரங்கத்தில் கலை நிகழ்வுகளும் நடைபெறும் என கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.