சிட்னியின் தென்கிழக்கில் உள்ள கென்சிங்டனில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த நபர் பல்கலைகழக வளாகத்திலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பல இலத்திரனியல் உபகரணங்களை அவரது வீட்டிலிருந்து மீட்டுள்ளனர்.
இலங்கை பிரஜையிடமிருந்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்த ஆவணங்களையும் இலக்கு வைக்க கூடிய பல இடங்கள் மற்றும் நபர்களின் விபரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கை வைத்துப்பார்க்கும்போது அவருக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜையின் குறிப்பேட்டை வாசித்த பல்கலைகழகத்தின் ஏனைய பணியாளர்கள் காவல்துறையினரை எச்சரிக்கை செய்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை சேர்ந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை பயங்கரமானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பல கட்டிடங்களும் தனிநபர்களும் இலக்காக தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிசெய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு கல்வி விசாவில் சென்ற நிசாம்டீன் நியுசவுத்வேல்ஸ் பல்கலைகழகத்தில் பணியாற்றியதுடன் அவ்வப்போது இலங்கை சென்று வந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவரை முன்னர் எங்களிற்கு தெரியாது இவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.