Breaking

Post Top Ad

Wednesday, August 1, 2018

மாநகரசபையில் த.ம.விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடை நீக்கம்!

மட்டக்களப்பு மாநகர சபையினால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் 4 பேருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தடை தீர்மானம் மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நீக்கப்பட்டது.

கடந்த அமர்வின் போது சபையினை அவமதிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான ஒரு மாதகால தடை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வே.தவராசா தலைமையில் எட்டு உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு குறித்த உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்களின் தடையினை நீக்கும் வகையில் விசேட அமர்வினை கோரியிருந்தனர்.

இதனடிப்படையில் (செவ்வாய்க்கிழமை) காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் விசேட அமர்வு நடைபெற்ற நிலையில், குறித்த நான்கு உறுப்பினர்களின் தடையினை நீக்குவது தொடர்பிலான பிரேரணை மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்டது.

குறித்த தீர்மானம் மாநகரசபை சட்ட திட்டங்களுக்கு அடிப்படையில் உறுப்பினர்களின் ஏகமானதான தீர்மானத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்விமனோகர் தவிர்ந்த மற்றைய நான்கு பேரின் தடையினை நீக்குவதற்கு சபையின் அனுமதியை கோரியிருந்தார்.

அத்துடன் கடந்த அமர்வின் போது ஐந்து பேரும் குழுவாக செயற்பட்டதன் காரணமாகவே குறித்த தடை விதிக்கப்பட்டதாகவும் அன்றைய தினம் குறித்த நான்கு பேரும் நடந்துகொண்ட விதம் தொடர்பில் அடுத்த அமர்வில் எழுத்துமூலம் விளக்கமளிக்க வேண்டும் என்ற முன்மொழிவினையும் மாநகர முதல்வர் தனது உரையின்போது தெரிவித்தார்.

இதன்போது பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த நான்கு பேருக்குமான தடை மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமானதான ஆதரவுடன் நீக்கப்பட்டது.

மேலும் இந்த அமர்வில் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தவிர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages