Breaking

Post Top Ad

Monday, August 13, 2018

மட்டக்களப்பில், விருட்சம் மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் வீட்டுத் திட்ட மாதிரிக் கிராமம் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் திங்கட்கிழமை (13.08.2019) திறக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்;பட்டது.


விருட்சம் மாதிரிக் கிராமத்தில் 29 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், அபிவிருத்தி செய்யப்பட்ட 29 காணிகளுக்கான  உறுதிப் பத்திரங்களும், பயனாளிகள் 192 பேருக்கும் வீடமைப்பு உதவிக் காசோலைகள், பயனாளிகள் 75 பேருக்;கு 'சொந்துருபியச'எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன்;, பயனாளிகள் 200 பேருக்;கு  தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடனுக்கான காசோலை வழங்கப்பட்டன.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைiயில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா, பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலி ஸாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,  சீ.யோகேஸ்வரன், வீடமைப்பு அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், உதவி உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages