Breaking

Post Top Ad

Sunday, August 19, 2018

9 வயதுசிறுவன் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில்தொங்கியநிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது. நேற்றயதினம் தாய் மற்றும் சிறியதந்தை ஆகியோர் தொழிலுக்கு சென்றுள்ளதுடன் வீட்டில் குறித்த சிறுவன் தனிமையில் இருந்ததுடன் அவனது 3 வயதான சகோதரன் அயல்வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்ததும் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்ற சிறியதந்தை இளயமகனை அழைத்துகொண்டு வீட்டிற்குசென்றதுடன் மற்றய மகனைகாணவில்லை என தேடியுள்ளார்.


இந்நிலையில் வீட்டிற்கு அருகில் பயன்படாத நிலையில் உள்ள ஆட்டுகொட்டிலில் தொங்கியபடி இருந்த சிறுவனை அவனது சகோதரன் அவதானித்து தந்தைக்குதெரியப்படுத்தியுள்ளான். பின்னர் சடலம் மீட்கபட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டது. சம்பவத்தில் பாணுசன் என்ற 9 வயது சிறுவனே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவனின் சிறியதந்தை கூறும்பொழுது தூக்கில்தொங்கும் அளவுக்கு எனது மகனிற்கு போதிய விளக்கம் இல்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை இந்தகொடியசெயல் திட்டமிட்டுசெய்யப்பட்டதாக கூறினார்.

சம்வபவம் தொடர்பான மேலதிகவிசாரணைகளை வவுனியா போலிசார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் இன்றயதினம் பிரேதபரிசோதனை செய்யபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages