Breaking

Post Top Ad

Wednesday, August 8, 2018

ஆயித்தியமலை புனித சதா சகாய மாமதாவின் 64 ஆண்டு விழா 24ஆம் திகதி ஆரம்பம் - திருவிழா முன் ஏற்பாட்டுக் கூட்டம்


மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாமதா திருத்தலத்தின் 64 ஆண்டு விழாவை முன்னிட்டு முன்எற்பாடுகள் தொடர்பான கூட்டம் வவுணதீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 24ஆம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலியுடன் அன்னையின் வருடாந்த விழா நிறைவுபெறவுள்ளது.

இத் திருவிழா காலங்களில் வடகிழக்கு மட்டுமல்லாமல் தென்பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இவ் விழாவிற்கு வருகைதருவது வழமை, இதற்கென தண்ணீர், உணவு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட முன் ஆயத்தங்கள் தொடர்பிலான இக் கூட்டத்தில் குறித்த பிரிவின் திணைக்களங்களுக்குப் பொறுப்பான அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆயல அருட் தந்தை அன்ரனி டிலிமா, மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராஜா மற்றும் சுகாதார சேவை அதிகாரிகள், பொலிஸ்  பொறுப்பதிகாரிகள், திணைக்கள பொறுப்பதிகாரிகள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வழமைபோன்று இவ்வருடமுன் பாதயாத்திரை 01ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பிலிருந்து வவுணதீவு ஊடாக அயித்தியமலைக்கும், செங்கலடியிலுருந்து கரடியனாறு ஊடாக அயித்தியமலைக்கும் இரு வழியாக செல்லும் எனவும், இதற்கான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் குளிப்பானங்கள் உணவுப்பொருட்கள் கடந்த வருடத்தைப்போல் வழங்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages