Breaking

Post Top Ad

Thursday, August 16, 2018

மட்டக்களப்பில் 54 இலட்சம் ரூபாய் சமுர்த்தி பணம் மோசடி!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி திணைக்களத்தில் இருந்து சுமார் 54 இலட்சம் ரூபாய்  மோசடி செய்யப்பட்ட சம்பவம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த 54 இலட்சத்தில் ஒரு தொகைப் பணம் (காசோலை ) மாற்றப்பட்டு மணமாக்கப்படடுள்ளதாகவும் தெரியவருகின்றது.


இதில் சுமார் 27 இலட்சம் கைது செய்யப்பட்ட சந்தேச நபர் ஒருசரின் வீட்டிலுள்ள தென்னை மரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள கணக்காளராக பணியாற்றிவரும் பஷீர் அவர்களின் கையெழுத்திடப்பட்ட காசோலை மூலமாகவே இந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோப்பாவெளிப்பகுதி பொதுமக்கள் 9 பெயரின் பெயரில் காசோலை வரைந்து குறித்த பணம் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பெரும் குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்னர் சமூர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


இதனையடுத்து  அங்கு கடமையாற்றும் இன்றும் சிலர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.


இது குறித்த விசாரணைகளை மட்டக்களப்பு பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.


இம் மேசடி கணக்காளர் மற்றும் பொறுப்பு உத்தியோகத்தர் போன்றோரின் கைஒப்பத்தை திருட்டுத்தனமாக வைத்து மேற்படி மோசடி மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் தகவல்கள் வௌியாகியுள்ளது.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages