குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்வது தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் அண்மையில் செங்கலடியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் குறித்த தீர்மானம எட்டப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்இ முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நி.இந்திரகுமார்இ அ.மாசிலாமணிஇ செங்கலடி வர்த்தகர் சங்கத் தலைவர் சு.இராஜேந்திரன் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - புல்லுமலை தண்ணீர் தொழிற்ச்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல. புல்லுமலை கிராமமானது குடி தண்ணீர் இல்லாத மிகவும் வறட்சியான வானத்தை நம்பி வாழும் கிராமமாகும். இந்த நிலையில் நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான நீர் உறிஞ்சப்படுமானால் சிறு குளங்களும் வற்றி கிராமமே சுடுகாடாகி விடும் நிலை ஏற்படும்.
மட்டக்களப்பு புல்லுமலை கிராமத்தில் காத்தான்குடி நகர சபை தலைவரால் தண்ணீர் தொழிற்ச்சாலை அமைத்து நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான குடி தண்ணீரை போத்தலில் அடைத்து அரபு நாட்டிற்கு விற்ப்பனை செய்யும் திட்டமாகும். இதனால் கால போக்கில் புல்லுமலையையும் அதனை அண்டியுள்ள கிராமங்களும் வரண்ட நிலமாக மாறிவிடும். குறித்த கிராமங்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் பிரதானமாக கொண்ட கிராமமாகும்.
இதனை நிறுத்துமாறு கோரி பல தடைவைகள் ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறியும் கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை மற்றும்; ஜனாதிபதி இவ்விடயத்தை அலட்சியம் செய்த காரணத்தினால் இதை கண்டித்து செப்டெம்பர் 7ம் திகதி வீட்டிற்குள் முடங்கி வீதிகளை வெறிச்சோட்டும் போராட்டம் ஒன்றை ஏற்ப்பாடு செய்துள்ளார்கள்.
செப்டெம்பர் 7ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்து வெளியே வராது வீட்டிற்குள் முடங்கும் போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதே சமயம் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஒரு நாள் சுகயீன விடுமுறையை பெற்று வீட்டிற்குள் முடங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். மற்றும் வர்த்தக வணிக வியாபாரிகளும் அன்றைய தினம் தங்களது வியாபார நிலையங்களில் கறுப்பு கொடிகளை பறக்க விட்டு வீட்டிற்குள் முடங்கியிருக்குமாறும் பொது மக்கள் போக்குவரத்துக்களை தவிர்த்து வீதிகளை வெறிச்சோட்டுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்' என்றார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.