காவேரி வைத்தியசாலை சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் திகதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதிக்கு 10வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவருக்கு இன்று உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இது குறித்து சற்று முன்னர் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிபம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.