Breaking

Post Top Ad

Thursday, August 23, 2018

மீன் பிடிக்க சென்ற 23 வயதுடைய இளைஞன் நீரில் மூழ்கி பரிதாபகரமாக மரணம்

(ஜக்தீஸ்)

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட கோப்பாவெளி  பள்லாளி குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக  உயிர் இழந்துள்ளார்

வவுணதீவு, சொறுவாமுனை கிராமத்தை சேர்ந்த  வயதுடைய  அன்னேஸ்வரி விமல்ராஜ்(வயது 23 ) என்ற இளையனே சம்பவத்தில் உயிரிழந்துளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.


இவர் நேற்று காலை மீன்பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து தனது  நபர்களுடன் தானும் ஒருவராக சென்றுள்ளார். இவ்வாறு சென்ற  இளைஞனே நீரில் மூழ்கி  உயிரிழந்தாக அவருடன் சென்ற சக நபர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவரது மரண  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages