இயற்கையான சேதனப்பசளையை பயன்படுத்தி விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.
இதற்கான ஆலோசனைகள் அமைச்சரினால் புதன்கிழமை (01) மாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உர நிவாரணத்திற்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இந்த பணம் வழங்கப்படவுள்ளது.
இயற்கை பசளையை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளை விவசாயிகள் மத்தியில் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுமார் 5,000 விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு இயற்கை உரத்தை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் இந்த வருடத்தில் விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குவதற்காக 33,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
Post Top Ad
Sunday, August 5, 2018
விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம் - விவசாய அமைச்சு தீர்மானம்
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.