Breaking

Post Top Ad

Tuesday, August 7, 2018

மூதூரில் அக்சன் பாம் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் படுகொலை 12ஆவது ஆண்டு நினைவஞ்சலி

மூதூரில் அக்சன் பாம் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் படுகொலை  12ஆவது ஆண்டு நினைவஞ்சலி
**********************************************

எத்தனை படுகொலை தடயங்களை சுமந்த இனமாய்
அத்தனை மரணவலியையும் தாங்கியே பயணிக்கும் தமிழினம்
ஆறாத வலி தந்து மீளாத துயரில் மூழ்கி
மாறாத துன்பம்
ஆறிடும் நாளுண்டோ தமிழினத்திற்கு
ஆயுதம் ஏந்திடாத அப்பாவி தமிழர் படுகொலைகள் ஏராளம்
காணாமல் ஆக்கப்பட்டோரில் தமிழர்கள்
தாராளம்
பராமுகமாய் சர்வதேசம் தமிழினத்தை ஏமாற்றியே பயணிக்கிறது
செய்வதறியாத மனவேதனையோடு நாடெங்கும் தமிழரின் பயணம்

மனிதாபிமான தொண்டு செய்தவனையே விட்டுவைக்காத சிங்களம்
சாதாரண தமிழனை எங்ஙனம் பாதுகாக்கும்
எண்ணிப்பார்க்கையில் தீராத சோகம் நெஞ்சுக்குழியை அடைக்கும்

அழிவையும் இனப்படுகொலையையும் சந்தித்த சமூகமாய் தமிழினம்
அவ்வினம் மீட்சி பெறுமா? அல்லது உலகத்தின் பார்வையில் மறைக்கப்படுமா?

ஒவ்வொரு உயிரும் வாழ்தலின் இன்பத்தை வேண்டியே பிறக்கும்
நன்றே சிறக்கும்
அதன் உரிமையை தகர்த்து அழித்தல் தகுமோ!
உலக நீதியே
பதில் தருவாயோ!
தமிழருக்கு

இந்நாளில் அரச இயந்திரத்தால் படுகொலையான என் உறவுகளின் புனித ஆன்மாவுக்கான நீதியை வேண்டி
ஆன்ம சாந்திக்காக பிராத்தனை செய்வோம்
(றேணு)

 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் நடந்த படு­கொ­லைச்­சம்­ப­வத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் (ACTION CONTRALA RAIM AGAINST HUNGER) என்ற நிறு­வ­னத்தைச் சேர்ந்த 17, தொண்­டர்கள் படு­கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் 10, வரு­டங்கள் பூர்த்­தி­யான நிலையில் அப்­பெற்­றோர்­களும் உற­வி­னர்­களும் தங்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்­லை­யென்­பதை கவ­லை­யுடன் தெரி­வித்­தமை இங்கு பதிவு செய்­து­கொள்­ளப்­ப­டு­கி­றது.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages